2025 மே 16, வெள்ளிக்கிழமை

இ.தொ.கா காரியாலயத்துக்கு சீல்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் மல்லியப்பு சந்தியில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் காரியாலத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த காரியாலயத்தில், உணவு பொருட்கள் அடங்கிய 19 பொதிகள் மீட்கப்பட்டதையடுத்தே அக்காரியாலத்துக்கு சீல் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பொதிகள் வாக்காளர்களுக்கு வழக்கப்படவிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அதுதொடர்பில் தமக்கு கிடைத்த தகவல்களை அடுத்தே காரியாலயத்துக்கு சீல் வைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒவ்வொரு பொதியிலும் 3 கிலோகிராம் அரிசி, 1 கிலோகிராம் கிழங்கு, 2 செமன் டின்கள் மற்றும் மிளகாய் தூள் 50 கிராம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .