2025 மே 16, வெள்ளிக்கிழமை

தேர்தல் முறைப்பாடுகளுக்காக பொலிஸுக்கு புதிய புத்தகம்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 17 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் தொடர்பிலான முறைபாடுகளை பதிவுசெய்து கொள்வதற்காக ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் தேர்தல் முறைபாட்டு தகவல்கள் புத்தகத்தை பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சகல பொலிஸ் நிலைங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் கட்டளையிட்டுள்ளார்.

பொலிஸ் தேர்தல் செயலக காரியாலயம் எனும் பெயரில் பயன்படுத்தப்படும் அந்த புத்தகத்தை மிகவும் கவனமாக கையாளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த புத்தகத்தை பாதுகாப்பாக கையாளுமாறும், தேர்தல் வழக்குகள் நிறைவடையும் வரையிலும் பூட்டுப்போட்டு அந்த பூட்டின் சாவியை தம்வசம் வைத்துக்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

இந்த புத்தகம் தொடர்பிலான பொறுப்பை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தனிப்பட்ட ரீதியில் வைத்துகொள்ளவேண்டும் என்றும், யாராவது இடமாற்றம் பெற்றுச்சென்றால், அந்தப்பவியை புதிதாக பொறுப்பேற்கின்ற அதிகாரியிடம் அதனை ஒப்படைக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .