Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த வழக்குஇரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி வசந்த ஜினதாசவினால் நேற்று திங்கட்கிழமை (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வழக்கை 21ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன் தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளரான சாந்த தொடாங்கொட என்பர் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார்.
இக்கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த, முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஐயசேகர, காவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்ஷன த சில்வா, சப்ரகமுவ மாகாண சபையின் உறுப்பினர் நிலந்த ஜயகடகொடி, நிவித்திகலை பிரதேச சபையின் முன்னாள் பிரதி தலைவர் அஜித் மலவி குணரத்ன, சமுர்த்தி உத்தியோகத்தர் அசங்க நாமல் பெலவத்த ஆகியோர் பிணை கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
சந்தேக நபர்கள் சார்பில் நேற்று (08) ஆஜராகியிருந்த சட்டத்தரணிகளான சேனாரத்ன மற்றும் பிரியந்த கருணாதிலக்க ஆகியோர் கொலை தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாகவும் 8 மாத காலமாக சந்தேகத்தின் பேரில் கைதானவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தனர். எனவே, அனைத்து விசாரணைகளும் முடிவடைந்து விட்டதால் அவர்களுக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இவ்வழக்கில் அரச தரப்பு சட்டத்தரணியாக ஆஜராகியிருந்த லக்மாலி திசாநாயக்க தமது எதிர்ப்பினை தெரிவிக்காத போதிலும், கடுமையான பிணை நிபந்தனைகளை விதித்து பிணை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இருதரப்பு வாத பிரதிவாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இவ்வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் ஏற்கெனவே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
6 hours ago