Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 16 , பி.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை இடம்பெற்ற இனப்படுகொலை சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்று, தமிழக சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன.
சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று தாக்கல் செய்த தனி தீர்மானத்தில்,
'இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். இதனை இந்திய அரசு ஐ.நா.வில் வலியுறுத்த வேண்டும். போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று ஏற்கனவே அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது.
ஆனால், அமெரிக்கா தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றியுள்ளது. ஆனால் இந்தியா இந்த விஷயத்தில் ஐ.நாவுக்கு, நெருக்கடி கொடுத்து, சர்வதேச விசாரணைக்காக பொது வாக்கெடுப்புஇலங்கை போரின்போது சர்வதேச சட்டம், ஜெனீவா ஒப்பந்தங்களை மீறி, போர்குற்றங்கள் நடத்திய அனைவர் மீதும், சர்வதேச விசாரணை நடத்த இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் சேர்ந்து ஐ.நா.வில் வலியுறுத்த வேண்டும்.
அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பது தெரிந்தால், இந்தியா, ராஜதந்திர ரீதியில் அமெரிக்காவை தன்பக்கம் இழுத்து, இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்த வேண்டும் என்று, இந்திய பேரரசை, தமிழக சட்டப்பேரவை கேட்டுக்கொள்கிறது.
என்னால் முன்மொழியப்பட்ட இந்த தீர்மானத்தின் மீது, பிற உறுப்பினர்கள் கருத்துகளை தெரிவித்து ஏக மனதாக தீர்மானத்தை நிறைவேற்றி தர உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்தார்.
இந்த தீர்மானம் தொடர்பில், அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் உரையாற்றியதையடுத்து, அனைத்து கட்சி உறுப்பினர்களும் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்து பேசினர்.
இதையடுத்து தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டநிலையில், எதிர்ப்பு ஏதுமின்றி, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .