Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாம் அறிக்கையை கூர்ந்து ஆராய்ந்து பார்ப்போம். இந்த அறிக்கைக்கு அமைவாக இலங்கையுடனும் ஐ.நா மனித உரிமை பங்குதாரர்களுடனும் செயற்பட நாம் ஆவலாக உள்ளோம் என்று ஐக்கிய இராச்சியம் தெரிவித்துள்ளது.
மனித உரிமை ஆணையாளரின் விசாரணை கோரும் தீர்மானத்தை மார்ச் 2014இல் ஐக்கிய இராச்சியம் இணை அணுசரணை செய்தது என்றும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய இராச்சியத்தின் ஆசியாவுக்கான அமைச்சர் ஹியூகோ சுவைர் கூறியதாவது,
'இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் கடுமையான மனித உரிமை மீறல்கள் துஷ்பிரயோகங்கள் தொடர்பான முக்கிய அறிக்கை வெளியிடப்பட்டதை நான் வரவேற்கின்றேன். இந்த அறிக்கையின் தயாரிப்புக்கு பங்களிப்புச் செய்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், அதிகாரிகள் மற்றும் ஏனையோருக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.
ஐக்கிய இராச்சியம், ஐ.நா விசாரணைக்காக கடுமையாக பரப்புரை செய்ததுடன், இந்த விசாரணைக்கு அதிகாரமளித்த தீர்மானத்தை கொண்டு வருவதில் பிரதான பங்கு வகித்தது.
இலங்கையின் மோதல் மரபு முறையாக அணுகப்படுவது முக்கியமானது என நாம் நம்புகின்றோம். இதன் மூலம் இலங்கை தனது முழுமையான வலுவுடன் முன்னேற முடியும்.
நாம் அறிக்கையை கூர்ந்து ஆராய்ந்து பார்ப்போம். இந்த அறிக்கைக்கு அமைவாக இலங்கையுடனும் ஐ.நா மனித உரிமை பங்குதாரர்களுடனும் செயற்பட நாம் ஆவலாக உள்ளோம்.
கடந்த கால பிரச்சினைகளை தீர்த்து சகல இலங்கையருக்கும் சமாதானம், செழிப்பு கிடைக்க உதவும் ஏகமனதான தீர்மானம் ஒன்றை நாம் அடைவோம் என நாம் நம்புகின்றோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .