Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 17 , பி.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் யுத்தக் குற்றங்களை விசாரிப்பதற்கு உள்நாட்டு, சர்வதேச கலப்பு விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கூறியிருப்பதை ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்கள் முழு ஆதரவு வழங்க வேண்டுமென மனித உரிமைகள் காப்பகம் கூறியது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கலப்பு நீதிமன்ற பரிந்துரைத்துள்ளதுடன் அந்த நீதிமன்றில் சர்வதேச நீதிபதிகள், வழக்கு நடத்துனர்கள், சட்டவுரைஞகள், புலனாய்வாளர்கள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், சுயாதீனமான இலங்கை விசாரணை, வழக்கு நடத்தும் அமைப்பு, சாட்சியங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இலங்கை அரசாங்கம் இந்த முக்கியமான முன்னெடுப்பை ஏற்று சர்வதேச சமுதாயத்தின் நற்பெயரை சம்பாதித்துக்கொள்ள வேண்டுமென மனித உரிமை காப்பகத்தின் ஜெனிவா பணிப்பாளரான ஜோன் பிஷர் கூறினார்.
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் உள்ளூர் விசாரணை மட்டும் போதாது எனும் நிலைப்பாட்டில் மனித உரிமை ஆணையாளர் உறுதியாக உள்ளாரென ஆணையாளரின் அறிக்கையில் இறுதியாக கூறப்பட்டுள்ளது.
அரசாங்க படைகள், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினரும் யுத்த சட்ட மீறல்களில் ஈடுபட்ட விவகாரங்களை இந்த அறிக்கை நம்பகரமான முறையில் தொகுத்துள்ளது. இவற்றுள், சட்டவிரோதமான கொலைகள், பலவந்தமாக கடத்தப்படல், பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள், சிறுவர்களை வலுக்கட்டாயமாக போராளிகளாக சேர்த்துக்கொள்ளல், சிவிலியன்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இடங்கள் மீதான சட்டவிரோதமான தாக்குதல்கள், சுதந்திரத்தை மறுத்தல், மனிதாபிமான உதவிகளை வேண்டுமென்றே மறுத்தல் என்பவை இந்த விவரங்களில் அடங்குகின்றன.
ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் 2011 அறிக்கை உட்பட வேறு விசாரணைகள் மூலம் தெரியவந்த மீறல்களுடன் இந்த அறிக்கை ஒத்துப்போகின்றது.
ஆலோசனை தொழில்நுட்ப உதவி என்பவற்றை வழங்க முன்வந்துள்ளதுடன், 'இவ்வாறாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பொறிமுறை நம்பிக்கையூட்ட அவசியமானது' எனவும் கூறியுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள கலப்பு நீதிமன்ற பொறிமுறையில் பெரும்பான்மையாக சர்வதேச நீதியரசர்களும் ஒரு பிரதான சர்வதேச வழக்கு நடத்துனரும் இருக்க வேண்டுமெனவும் இதுவே அரசியல் மற்றும் வேறு தலையீடுகளை ஒழிக்கும் பாதுகாப்பாகும் எனவும் கூறியுள்ளது.
இத்தோடு இலங்கை யுத்த குற்றம், இனப்படுகொலை, ஆட்கடத்தல் என்பவற்றின் குற்றவியல் குற்றமாக்க வேண்டும். பலவந்தமாக காணாமல் போகச் செய்தல் தொடர்பான சமவாயம், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற ரோம் சட்டம் என்பவற்றை ஏற்று ஒப்பிட வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
இலங்கை மீதான தீர்மானத்தை வரைதல் தொடர் கலந்துரையாடல்கள் மனித உரிமை ஆணையகத்தில் விரைவில் தொடங்கவுள்ளது. அறிக்கையில் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதாக இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
'நல்ல விளைவைத்தரும் பொறுப்புக்கூறல் செயன்முறை'யை உறுதி செய்தல் பேரவையின் நம்பகத்தன்மையில் தங்கியுள்ளது எனவும் இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட முன்னைய பொறிமுகைள் வெற்றி பெறக்கூடாது என வரையப்பட்டவை எனவும் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .