2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

'தகவலறியும் சட்டமூலம் அரசியலமைப்பை மீறியுள்ளது'

Menaka Mookandi   / 2016 மே 03 , பி.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

'தகவலுக்கான உரிமைச் சட்டமூலத்தின் சிற்சில ஏற்பாடுகள், அரசியலமைப்பின் உறுப்புரைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளது' என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை (02) தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் நேற்று பிற்பகல் 1 மணிக்கு, நாடாளுமன்றம் கூடியது. அவையின் பிரதான நடவடிக்கையான சபாநாயகர் அறிவிப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து அறிவித்த சபாநாயகர், 'தகவலுக்கான உரிமைச் சட்டமூலத்தை  சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பிலான உயர் நீதிமன்ற வியாக்கியானம் எனக்கு கிடைத்துள்ளது. அந்த வியாக்கியானத்தில், தகவலுக்கான சட்டமூலத்தில் சில உறுப்புரைகள், அரசியலமைப்பின் சில ஏற்பாடுகளை மீறியுள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது' என்றார்.

'அரசியலமைப்பின் 87ஆவது பிரிவின் பிரகாரம், இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டுமாயின், விசேட கூடுதல் வாக்குகளால் நிறைவேற்ற வேண்டும். உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகள், திருத்தங்கள் இந்தச் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படுமாயின், சாதாரண பெருபான்மை வாக்குகளினால் நிறைவேற வேண்டும் என்று வியாக்கியானத்தில் குறிப்பிட்பட்டுள்ளது என்றும் சபாநாயகர் மேலும் அறிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X