2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

5,000 ரூபாயை 'செல்லா காசு ஆக்கவும்'

Gavitha   / 2016 நவம்பர் 21 , பி.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுக்கி வைக்கப்பட்டிருந்த கறுப்பு பணத்தை அழிப்பதற்காக, இந்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட அதிரடி நடவடிக்கைகளை உதாரணமாகக் கொண்டு, இலங்கையிலுள்ள 5,000 ரூபாய் பணத்தை செல்லுபடியற்றதாக்க வேண்டும் என்று பிவிதுறு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நேற்றுத் திங்கட்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதன் மூலம், நாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் தொடர்பான தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும். அவை, மஹிந்த ராஜபக்ஷவிடமா அல்லது மத்திய வங்கியின் திருடர்களிடமா உள்ளது என்பது பற்றி நாமும் தெரிந்துக்கொள்ள முடியும்' என்றும் அவர் தெரிவித்தார்.

'திருடப்பட்டுள்ள அரச சொத்துக்களை கண்டுபிடிப்பதற்கு, அரசாங்கம் குழுவொன்றை நியமித்துள்ளது. இதற்காக, பொதுமக்களின் பணத்தை பயன்படுத்தி உலகம் முழுவதும் சுற்றித்திரிந்ததை தவிர, அரசாங்கத்தின் ஒரு சதத்தையேனும் கண்டுபிடிக்க முடியவில்லை' என்று அவர் இதன்போது தெரிவித்தார்.

கடந்த 1973ஆம் ஆண்டு பேராசிரியர் என்.எம்.பெரேரா நிதியமைச்சராக இருந்தக் காலத்தில், 100 ரூபாய் நாணயத்தாள் செல்லுபடியற்றதாக ஆக்கப்பட்ட பின்னர், பல பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் தொடர்புடைய விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .