Editorial / 2025 ஜூன் 09 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

2029 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தற்போதைய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டங்களை தீட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தி பிரதமர் பதவியில் இருந்து ஹரிணி அமரசூரியவை நீக்கிவிட்டு, மேலதிக நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தவோ அல்லது பிரதமர் பதவியில் மாற்றங்களை ஏற்படுத்தவோ, அரசாங்கம் எவ்விதமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கடந்தவார அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
எனினும், 2029 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரியவை நியமிப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்பும் ஹரிணி அமரசூரிய தரப்பினரும் எவ்விதமான கலந்துரையாடல்களிலும் ஈடுபடவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago