2025 ஜூலை 31, வியாழக்கிழமை

21 அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் : கைதானவருக்கு பிணை

Freelancer   / 2025 ஜூலை 30 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 21 அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்ததாகக் கூறி சமீபத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளர் பிணையில்  விடுவிக்கப்பட்டுள்ளார்.

அந்த நபர் இன்று (30) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது,  500,000 மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நாட்டிற்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகளுடன் இவர் ஜூலை மாதம் 12ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி...

21 அதி சொகுசு மோட்டார் சைக்கிள்கள் சிக்கின

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .