2025 ஜூலை 07, திங்கட்கிழமை

24 இந்தியப் பிரஜைகள் கைது

Editorial   / 2019 ஜனவரி 26 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சட்டவிரோதமான முறையில், நாட்டில் தங்கியிருந்த 24 இந்தியப் பிரஜைகளை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இங்கிரிய பிரதேசத்திலுள்ள தொழிற்சாலையொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இந்த 24 பேரும் சுற்றுலா வீசாவிலேயே இலங்கைக்கு வந்துள்ளனர் என்றும் வீசா காலம் நிறைவடைந்த நிலையில், இலங்கையிலேயே தங்கியிருந்துள்ளனர் என்றும்  அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள், மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .