Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 02 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவுதி அரேபியாவின்'Vision 2030' திட்டத்தின் ஒரு பகுதியாகவும், சுகாதாரத் துறை மாற்றத் திட்டம் மற்றும் ஹஜ் பயண அனுபவ மேம்பாட்டு திட்டத்தின் கீழாகவும், சுகாதார அமைச்சகம் "சேஹா டிஜிட்டல் வைத்தியசாலை" மூலம் ஹஜ் பயணிகளுக்காக 24 மணி நேர டிஜிட்டல் மருத்துவ ஆலோசனை சேவைகளை தொடங்கியுள்ளது.
937 என்ற அழைப்பு மையம், “சிஹாட்டி” செயலி மற்றும் “X” தளத்தின் மூலம் இந்த சேவைகள் வழங்கப்படுகின்றன. அரபு, ஆங்கிலம், பிரஞ்சு, துருக்கி, பாரசீக, உருது மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு மொழிகளில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
பயணிகள் ஆடியோ, வீடியோ அல்லது உரை வடிவ ஆலோசனைகளைப் பெறலாம், மருத்துவ ஆவணங்கள் மற்றும் சோதனை முடிவுகளை பதிவேற்றலாம்,தேவைப்பட்டால் மின்னணு மருத்துவ குறிப்புகளும் பெறலாம்.
“Sehhaty” செயலி மூலம் பயணிகள் தங்கள் எல்லை எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யலாம், இது முழுமையான டிஜிட்டல் சுகாதார அனுபவத்தை வழங்குகிறது.மக்கா, மதீனா மற்றும் ஹஜ் முகாம்கள் உள்ளிட 300க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக மருத்துவ நிலையங்களுடன் இணைந்து செயல்படும்
“Consult Plus” சேவை (அரபு மற்றும் ஆங்கிலத்தில்) அவசர மருத்துவ பதில்கள் மற்றும் விரைவான தீர்மானங்களை எடுக்க உதவுகிறது. இந்த முன்முயற்சி,ஹஜ் 1446 காலப்பகுதியில் உலகம் முழுவதிலும் இருந்து வரும் பயணிகளுக்கு எளிமையான, விரைவான, தரமான சுகாதார சேவைகளை வழங்குவதை உறுதி செய்கிறது.
எஸ். சினீஸ் கான்
6 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
58 minute ago