2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

24 மணிநேரத்தில் 167 முறைப்பாடுகள்

Editorial   / 2020 ஜூலை 17 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 14 ஆம் திகதி பிற்பகல் 4:00 மணி முதல் 15 ஆம் திகதி பிற்பகல் 4:00 மணி வரையிலான 24 மணி நேர காலப்பகுதிக்குள், தேர்தல்  தொடர்பான 167 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்து மத்திய நிலையத்துக்கு 19 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு 148 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதேவேளை, பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 3377 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதில், தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்து மத்திய நிலையத்துக்கு 758 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு 2619  முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .