2025 மே 02, வெள்ளிக்கிழமை

24 மணிநேரத்தில் இருவர் கொலை

Editorial   / 2024 டிசெம்பர் 11 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (11)  காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் இருவேறு  பிரதேசங்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.   

ஜா-எல கடையொன்றில் 45 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால், செவ்வாய்க்கிழமை (10) தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடைக்குள் சக ஊழியருடன் மது அருந்தியதாகவும் இதன்போது ஏற்பட்ட  வாக்குவாதம் முற்றி, மற்றைய ஊழியர் கூரிய ஆயுத்தால் தாக்கியுள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பலத்த காயங்களுடன் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சந்தேகநபர்,  பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுவிட்டார். அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஜா-எல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, லக்கல பிரதேசத்தில்  44 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (10)  உயிரிழந்துள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக குறித்த பெண் அவரது கணவரால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட லக்கல பொலிஸார்   சந்தேக நபரை கைது செய்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X