2026 மே 14, வியாழக்கிழமை

dd

298 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 06 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 298 இலங்கையர்கள் இன்று அதிகாலை (ஞாயிற்றுக்கிழமை) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

 இதன்படி, டுபாயிலிருந்து இரு விமானங்கள் மூலமாக 169 பேரும் கட்டாரிலிருந்து 41 பேரும் அவுஸ்ரேலியாவின் சிட்னியிலிருந்து 38 பேரும் ஜப்பானின் நரிட்டோவிலிருந்து 50 பேரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

  இவர்கள் அனைவருக்கும் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை  ஊழியர்களினால் பி.சி.ஆர். சோதனை  செய்யப்பட்டன.

இதனையடுத்து இவர்கள், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காகவும் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .