2025 மே 01, வியாழக்கிழமை

3,400 சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

Freelancer   / 2021 ஜூலை 20 , பி.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட, 3,400 சிகரெட்டுக்களுடன், வத்தளையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தீர்வை வரியின்றி சட்டவிரோதமாக சிகரெட்டுக்கள் கொண்டுவரப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, பேலியகொடை, மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள், வத்தளை பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பிலேயே இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு 10 மற்றும் கொழும்பு 12 பகுதிகளைச் சேர்ந்த 31 மற்றும் 42 வயதுடைய சந்தேகநபர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .