2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

3 ஆம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணம்

Janu   / 2024 செப்டெம்பர் 15 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருகாலத்தில் மாரடைப்பு வயது மூத்தவர்களுக்கே வந்தது. எனினும், வயது வித்தியாசம் இன்றி, தற்போது மாரடைப்பு வருகிறது. இதற்கு தவறான உணவு பழக்கவழக்கங்கள் காரணமாக குறிப்பிடப்படுகின்றது. இந்நிலையில்,  லக்னோவில் உள்ள மான்ட்ஃபோர்ட் பாடசாலையில்  3ஆம் வகுப்பில் கல்வி கற்கும்  மாணவி ஒருவர்  மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.   

சிங் என்ற 9 வயதுடைய மாணவி பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில், தனது சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளதுடன் உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதித்து, பின்னர் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு  பரிசோதித்த போது மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளதாக  தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த விடயம்   பொலிஸாரின்  கவனத்திற்கு சென்றும்,  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டி வருகின்றமைத குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X