2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

30க்கும் மேற்பட்ட நகரங்கள் ஸ்தம்பிதம்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 17 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் குறைந்தது 31 நகரங்களின் வர்த்தக நடவடிக்கைகள் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளதுடன், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  மேலும் 15 நகரங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, திருகோணமலை நகர மற்றும் மாநகர சபை, கேகாலை, சிலாபம், அம்பாறை, வென்னப்புவ, கெக்கிராவ, மொனராகலை, திவுலபிட்டிய, தெரணியகல, ஓரஸ்மங்கண்டிய, வாதுவை, பந்துரகொட, ரிக்கில்லககட ஆகிய பகுதிகளில்  வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், அம்பலங்கொட, மரதகஹமுல்ல, வெயாங்கொட, தங்கொட்டுவ, சேருநுவர, பலபத்வல, உல்பத, தங்காலை, பதுளை, பலாங்கொடை, வலப்பனே, பண்டாரவளை, எம்பிலிப்பிட்டிய மற்றும் மாத்தளை பகுதிகளிலும் வியாபாரம் நடவடிக்கைகள ஸ்தம்பித்தன.

சில நகரங்களில் உள்ள கடைகளை ஒரு வாரத்துக்கும், மற்ற நகரங்களில் இரண்டு வாரங்களுக்கும் மறு அறிவிப்பு விடுக்கப்படும் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X