2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

32 புறாக்கள் திருட்டு

Editorial   / 2025 ஒக்டோபர் 06 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தேசிய மிருகக்காட்சிசாலையின் உதவி பணிப்பாளர் எச்.ஏ.டி.பி. சமன்மாலி, தெஹிவளை பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம்,  கடந்த 4 ஆம் திகதி அதிகாலையில் இந்தத் திருட்டு நடந்துள்ளது.

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் நாட்டிற்கு கடந்த ஜூன் மாதம் கொண்டு வரப்பட்ட 63 புறாக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு, மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டன.

காணாமல் போன புறாக்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .