2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

35வது ஆண்டு நினைவேந்தல்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 22 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட 17 தமிழர்களில் 35 வது ஆண்டு நினைவேந்தல் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி இரவு 7 - 8 மணியளவில்  புதுக்குடியிருப்பு கிராமத்துக்குள் புகுந்த இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்து ஊர்காவல் படையினரும் வீடுகளின் உறங்கிக் கொண்டிருந்தவர்களின் 45 அப்பாவி தமிழ் மக்களை தூக்கத்திலிருந்து எழுப்பி விசாரணைக்கென கடற்கரை பகுதிக்கு ஒதுக்கிக் சென்றுள்ளனர்.

விசாரணக்கொன அழைத்துச் சென்றவர்களில் சிலர் உயிர் தப்பிய உள்ள போதிலும்   நள்ளிரவு வேளை பெண்கள் சிறுவர்கள் உட்பட 17 பேர் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இவர்களது சடலங்கள் துப்பாக்கி காயம் மற்றும் வெட்டுக் காயங்களுடன் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. உயிரிழந்தவர்களின் நினைவாக புதுக்குடியிருப்புபில் அமைக்கப்பட்டநினைவுத் தூபி முன்றலில் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் ஈகை சுடர் ஏற்றப்பட்டு,மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்தப் படுகொலையில் 09 ஆண்கள் 08 பெண்கள் சிறுவர்கள் என17 படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த படுகொலைச் சம்பவம் நடைபெற்று 35 ஆண்டுகள் கடந்த போதிலும் இதுவரை நீதி கிடைக்கவில்லை என இறந்தவர்களின் உறவினர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

பேரின்பராஜா சபேஷ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .