Editorial / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய கல்வியியல் கல்லூரிகளில், 2015/2017 கல்வியாண்டில் அனுமதிக்கப்பட்ட 4,236 டிப்ளோமாதாரிகளுக்கு, ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தமிழ் மொழி மூலம், 1,404 பேருக்கு இதன்போது நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, அளுத்கம, அட்டாளைச்சேனை, கொட்டகல ஆகிய கல்வியியல் கல்லூரிகளில் டிப்ளோமாப் பட்டங்களைப் பெற்றவர்கள் இதில் உள்ளடங்கியுள்ளனர்.
இதற்கமைய, தமிழ் - 173, இந்து சமயம் - 28, இஸ்லாம் - 23, கிறிஸ்தவம் - 37, மனைப்பொருளியல் - 44, தகவல் தொழில் நுட்பம் - 104, கணிதம் - 69, சங்கீதம் - 38, விளையாட்டும், உடற்கல்வியும் - 67, ஆரம்பக் கல்வி - 327, விஞ்ஞானம் - 122, இரண்டாம் மொழி தமிழ் - 50, சமூகக் கல்வி - 36, விசேட கல்வி - 30, நாடகமும் அரங்கியலும் - 15, விவசாயம் - 49, சித்திரம் - 59, வணிகக் கல்வி - 50, வடிவமைப்பு - 14, நடனம் - 25, மெகானிக்கல் வடிவமைப்பு - 04, நிர்மாண வடிவமைப்பு - 36, இலத்திரனியல் வடிவமைப்பு - 04 என்ற அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
38 minute ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
9 hours ago
02 May 2026