2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘48 மணிநேரத்துக்குள் முக்கிய சதித்திட்டம் ஒன்றை வெளியிட தயார்’

Editorial   / 2018 டிசெம்பர் 10 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதானி ஒருவரால் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கொலை முயற்சி ஒன்று குறித்து எதிர்வரும் 48 மணி நேரத்துக்குள் தெரிவிப்பதாக ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார்.

குறித்த கொலை சதித்திட்டம் தொடர்பான குரல் பதிவை 12ஆம் திகதி பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதி பொலிஸ்மா அதிபராக நாலக சில்வா பதவி வகித்த போது இந்த விடயம் தொடர்பான குரல் பதிவை அவரிடம் தான் வழங்கிய போதும் , அவர் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லையென்றும் நாமல் குமார தெரிவித்துள்ளார்.

மதஸ்தலம் ஒன்றை மையப்படுத்தி மேற்கொள்ளப்படவிருந்த குறித்த கொலை சதித்திட்டம் தொடர்பான தகவல் இந்த குரல்பதிவு மூலம் உறுதியாவதாகவும் இந்த சதித்திட்டம் 150 இலட்சங்களுக்கு முன்னெடுக்கப்படவிருந்ததாகவும் நாமல் குமார தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான அவர் தற்போது அரசியலுடன் தொடர்புபட்டுள்ளாரென்றும் இதற்கமைய இன்னும் 48 மணி நேரத்துக்குள் இந்த சதி முயற்சி குறித்த தகவலை வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .