2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

’5 நாட்களுக்குள் நீங்கும்’ லிட்ரோ அதிரடி

Freelancer   / 2021 நவம்பர் 20 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் 5 நாட்களுக்குள் நீங்குமென லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜானக்க பத்திரண தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மற்றும் மத்திய வங்கி என்பனவற்றின் தலையீட்டுடன், அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்னும் 05 நாட்களுக்குள், அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் அந்தத் தொகையை வழங்கக்கூடியதாக இருக்கும். 

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைகிறது. எதிர்காலத்திலும் இந்த நிலைமை நீடிக்கும்.

எனவே, சமையல் எரிவாயு கிடைப்பதில் தற்போது எவ்வித குறைப்பாடும் இல்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார் R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .