2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

518 கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை

Editorial   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

71ஆவது தேசிய தினத்தையொட்டி ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டிய கைதிகள் தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டு நிறைவு​ செய்யப்பட்டுள்ளதென, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாடுபூராகவுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து 545 கைதிகள் நாளைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளனரென, சிறைச்சாலைகள் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் நாளைய தினம் 518 கைதிகளே விடுதலை செய்யப்படுவரென்றும் ஏனைய 27 கைதிகளுக்கும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கினாலும், அவர்கள் செய்துள்ள ஏனைய குற்றங்களுக்காக தொடர்ந்தும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படுவார்களெனவும் அவர்கள் இன்றைய தினம் விடுதலை செய்யப்படமாட்டார்களெனவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் விடுதலை செய்யப்படவுள்ள கைதிகளில் 4 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .