2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

5ஆம் திகதி புறக்கோட்டை மொத்த விற்பனை வர்த்தக நிலையங்களுக்குப் பூட்டு

Editorial   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுங்கத் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் தொழிற்சங்கப் போராட்டத்தால், அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனை வர்த்தகர்களுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கக் கோரி,  புறக்கோட்டை மொத்த வர்த்தக நிலையங்களை நாளை மறுதினம் 5ஆம் திகதி மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக  அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர் சங்கத்தின் செயலாளர் ஜீ. இளமைநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்​பெற்ற சங்க கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சுங்கப் பிரிவினரின் தொழிற்சங்க நடவடிக்கைக் காரணமாக, சுங்கப் பிரதிநிதிகள் உத்தரவிட்டுள்ள பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிக்கப்படாமல் துறைமுகத்தில் கிடப்பதால், புறக்​கோட்டை மொத்த விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அத்தியாவசியப் பொருட்களுடனான 400-500 கொள்கலன்கள் இவ்வாறு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாகவும் என​வே அரச அதிகாரிகள் இதற்காக வர்த்தகர்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்க வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் தமக்கு ஏற்பட்டுள்ள பாரிய நட்டத்தை நுகர்வோர் மீது திணிப்பதற்காக, பொருட்களின் விலையை அதிகரிக்கும்   நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .