2025 மே 05, திங்கட்கிழமை

6,000 பொலிஸார் பாதுகாப்பு பணியில்

S.Renuka   / 2025 ஏப்ரல் 01 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்காக சுமார் 6,000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் கூறியுள்ளனர்.

பொலிஸாருக்கு மேலதிகமாக, இலங்கை இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படை (STF) ஆகியவற்றின் பணியாளர்களும் பாதுகாப்பைப் பராமரிப்பதில் உதவுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இராணுவம் வீதித் தடுப்புப் பணிகளில் கவனம் செலுத்தும், அதே நேரத்தில் பொலிஸாருக்கு சிவில் உடையில் நிறுத்தப்பட்டு பாதுகாப்புப் பணிகளுக்காக ஆயுதம் ஏந்தியிருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

முக்கியமான தகவல்களைச் சேகரிக்க புலனாய்வு அதிகாரிகளும் களத்தில் இருப்பார்கள் எனவும் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X