Editorial / 2021 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓகஸ்ட் 7ஆம் திகதி வரையிலும் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்கள் எண்ணிக்கை தொடர்பிலான புள்ளிவிவரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு அனுப்பிவைத்துள்ள புள்ளிவிவரத் தரவுகளின் பிரகாரம்,
நாட்டின் மொத்த சனத்தொகை, 2 கோடியே 19 இலட்சத்துக்கு 19ஆயிரம் பேர். அதில், 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 இலட்சத்துக்கு 45ஆயிரத்து 788 ஆவர்.
60 வயதுக்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 27 இலட்சத்துக்கு 51 ஆயிரத்து 116 பேர் ஆவர். அதனடிப்படையில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 14 இலட்சத்துக்கு 96 ஆயிரத்து 904 பேர் ஆவர்.
இவர்களில், 1 கோடியே 8 இலட்சத்துக்கு 71 ஆயிரத்து 332 பேர், முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர். இது 94.56 சதவீதமாகும்.
இரண்டாவது தடுப்பூசியை 26 இலட்சத்து 99 ஆயிரத்து 350 பேர் மட்டுமே, ஓகஸ்ட் 7ஆம் திகதி வரையிலும் பெற்றுக்கொண்டுள்ளனர். இது 23.48 சதவீதமாகும்.
கொழும்பு மாவட்டத்திலேயே ஆகக் கூடுதலானோர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர். ஆகக் குறைவாக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே பெற்றுக்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்த சனத்தொகை 98 ஆயிரம் பேர், இவர்களில் 44,738 பேர் முதலாவது தடுப்பூசியையும், 1,050 பேர் இரண்டாவது தடுப்பூசியையும் ஏற்றிக்கொண்டுள்ளனர்.
சனத்தொகை தொடர்பிலான தகவல்கள் 2020 மதிப்பீட்டின் பிரகாரம் திரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago