2025 ஜூலை 05, சனிக்கிழமை

6 நாள்களில் 49 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

Editorial   / 2019 ஜனவரி 09 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்தாண்டு டிசெம்பர் மாதம் 30ஆம் திகதியிலிருந்து இந்த வருடம் ஜனவரி மாதம் 5ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் மேற்​கொண்ட சுற்றிவளைப்பின் போது 49 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த சுற்றிவளைப்பின் போது அபராதத் தொகையாக 89,500 இலட்ச ரூபாய் பணமும் அறவிடப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த வருடம் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது, 60 மில்லியனுக்கும் அதிகமாக அபராதப் பணம் பெறப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் 21,188 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது 21,254 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .