2025 மே 06, செவ்வாய்க்கிழமை

6 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 8 பேர் பலி

Freelancer   / 2024 ஒக்டோபர் 24 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடகா - பெங்களூருவில், 6 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில், 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

 பெங்களூரு - ஹெண்ணூர், பாபுசாப் பாளையா பகுதியில் புதிதாக 6 மாடி கட்டிட நிர்மாண பணி நடந்து வந்தது. 

பெங்களூருவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து அடைமழை பெய்து வருகின்ற நிலையில், செவ்வாய்க்கிழமை (22) பகல் 3 மணியளவில்,  அந்த  கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. 

இதில் கட்டிடத்திற்குள் வேலை பார்த்த வடமாநில தொழிலாளிகள் இடிபாடுகளில் சிக்கினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஹெண்ணூர் பொலிஸார், மீட்பு படையினர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் அங்கு மீட்பு பணிகளை தொடங்கினர். இதன்போது,  விபத்தில் சிக்கி 8 தொழிலாளிகள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து,  கட்டிட உரிமையாளர், அவரது மகன் , ஒப்பந்ததாரர்  ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெங்களூரு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர்களது குடும்பத்துக்கு தலா 2 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X