S. Shivany / 2020 நவம்பர் 12 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் அதிகாரிகள் 600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 4 தினங்களுக்குள் பொலிஸார் எவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படவில்லையெனவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொரளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் சிலர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதை தொடர்ந்து, விசேட அதிரடிப் படை முகாமைச் சேர்ந்த சிலரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர். இதனையடுத்து, அவர்களுடன் தொடர்புடையவர்களையும் 3,000 பொலிஸாரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொலிஸ் சேவையில் 90,000 பேர் உள்ளனர். இவர்களில், 87,000 பேர் வழமைபோன்று கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .