2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

60க்கு மேற்பட்டோருக்கு ஆபத்து அதிகம்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 22 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களில்  91 சதவீதமானோர் தடுப்பூசி பெற்றிருக்கவில்லை என்று தொற்றுநோயியல்  பிரிவின் பதில் தலைவர் வைத்திய நிபுணர் டொக்டர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
 
60 வயதுக்கு மேற்பட்ட  மிகவும் சிறு தொகையினருக்கு தடுப்பூசி போடப்படாதது பிரச்சனை என்பதால், நாட்டின் பல பகுதிகளில் தனியாக தடுப்பூசி மையங்களை அமைத்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி போடுவோம் என்று தெரிவித்த அவர், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் விரைவில் தடுப்பூசி போடுவது முக்கியம் என்றும் சுட்டிக்காட்டினார்.

உயிரிழப்புகளைக் குறைத்தல் மற்றும் நோய்கள் பரவுவதைக் குறைத்தல் ஆகிய இரண்டு முக்கிய நோக்கங்களை தடுப்பூசி கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

கொரோனா மரணங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே 77 சதவீதம் உயிரிழக்கின்றனர் என்பதுன், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களின் இறப்பு சதவீதம் 22  என்றும் குறிப்பிட்ட அவர்,   65 முதல் 70 சதவீதமான மரணங்கள் நாட்பட்ட நோயுள்ளவர்களுக்கே ஏற்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

கொரோனா மரணத்துக்கு அதிக ஆபத்து உள்ளதால் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X