Editorial / 2019 செப்டெம்பர் 01 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
லொரியொன்றில் சுமார் 6ஆயிரம் கிலோகிராம் அளவிலான கழிவு தேயிலையை கடத்த முயற்சி செய்த இருவரை நிட்டம்புவ பொலிஸார் நேற்று (31) கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது, இந்த ஒரு தொகை தேயிலை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதனை கடத்திச்செல்ல முயற்சி செய்த இருவரையும் கைது செய்ததோடு, குறித்த லொரியும் நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் 35,38 வயதுகளையுடையவர்கள் என்பதோடு, இவர்கள் கலஹா பிரதேசத்தை சேர்ந்தவர்களென்றும் இவர்களை இன்று (01) அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 minute ago
42 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
42 minute ago
9 hours ago