2025 ஜூலை 10, வியாழக்கிழமை

78 பேர் சாட்சியம்; வசந்தவுக்கும் அழைப்பு

Editorial   / 2020 மார்ச் 05 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவுக்கு விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருமாரு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் லலித திசாநாயக்கவும் இன்று (05) ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதனை,  ஆணைக்குழுவின் செயலாளர் ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வௌிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தம்மிக குமாரிக்கும் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை 78 பேர் சாட்சியமளித்துள்ளனர்.

ஆணைக்குழுவின் 2 இடைக்கால அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .