2025 மே 10, சனிக்கிழமை

8 பேர் பணியிடை நீக்கம்

Mithuna   / 2023 டிசெம்பர் 14 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களவையில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இருவர் அத்துமீறி புகைக் குப்பிகளை வீசிய சம்பவத்தில் 8 பாதுகாப்பு அதிகாரிகளை மக்களவை செயலகம் இடைநீக்கம் செய்துள்ளது.

மக்களவையில் புதன்கிழமை(13)  பார்வையாளா்கள் கலரியில் இருந்த இரண்டு இளைஞா்கள் எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர் பாராளுமன்றத்திற்க்கு வெளியேயும் இதேபோன்று புகைக் குப்பிகளை வீசி பெண் உட்பட இருவா் தாக்குதல் நடத்தினர்.

இவா்கள் 4 பேரையும் பாதுகாப்புப் படையினா் கைது செய்து புதுடெல்லி ​பொலிஸிடம் ஒப்படைந்தனர்.

பாராளுமன்றம் மீதான பயங்கரவாதத் தாக்குதலின் 22-ஆம் ஆண்டு நினைவு தினத்தில் நடந்த இந்தத் தாக்குதல் திட்டத்தை 6 நண்பர்கள் இணைந்து செயல்படுத்தியது பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பல கட்ட சோதனைகளை கடந்து மக்களவைக்குள் புகைக் குப்பிகளை இருவர் கொண்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மக்களவைச் செயலகம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், பாதுகாப்பு குறைபாட்டுக்கு காரணமாக இருந்த 8 அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X