2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

85 வாக்காளர் அட்டைகள் ; பெண் வேட்பாளருடன் தபால்காரரும் கைது

Janu   / 2025 ஏப்ரல் 24 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வஜன அதிகாரம் கட்சியின் புத்தளம் மாநகர சபைக்கான பெண் வேட்பாளர் ஒருவர் 85 வாக்காளர் அட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக புத்தளம் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியால் விநியோகிக்கப்பட்ட வாக்காளர் அட்டைகள் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் - ரத்மல்யாய பகுதியில் புத்தளம் உதவி தேர்தல் ஆணையாளர் மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வாக்காளர் அட்டைகள், தபால்காரரால் சந்தேகநபருக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், சந்தேகநபரான தபால்காரர் தலைமறைவாகி இருந்த நிலையில், வியாழக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X