2025 மே 05, திங்கட்கிழமை

9mmஉடன் தயாராக இருந்த இருவர் கைது

Editorial   / 2023 ஒக்டோபர் 08 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உறவினரைக் கொலை செய்ய மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவ வீரர்கள் இருவர் எல்பிட்டியவில் 9mm கைத்துப்பாக்கியுடன்   கைது செய்யப்பட்டதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இராணுவ வீரர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரும் பாதாள உலக தலைவர் ரத்கம விதுரவின் இரண்டு சீடர்கள் என தற்போது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம், குறித்த வர்த்தகரை கொலை செய்வதற்காக அவரது வர்த்தக இடத்திற்கு அருகில் தங்கியிருந்த போதே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ வீரர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் விடுமுறையை கழிப்பதற்காக வந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X