2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

EPF பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடமாடும் சேவை

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 18 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊழியர் சேமலாப நிதிய மற்றும் அதனுடன் தொடர்புடைய பிணக்குகளை தீர்ப்பதற்காக நடமாடும் சேவை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை அனைத்து மாவட்ட மற்றும் தொழிலாளர் அலுவலகங்களில் முன்னெடுக்கவுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்போது, ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர் கணக்கு விபரங்கள், நிலுவை, உறுப்பினர் கணக்கு விபரங்களை தேசிய அடையாள அட்டை தகவலுக்கமைய சீர் செய்தல், உறுப்பினர்களை பதிவு செய்தல், முறைப்பாடுகளை பதிவு செய்தல், தொழிலாளர் சட்டங்கள் தொடர்பில் ஆலோசனைகளைப் பெறுதல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X