2025 ஜூலை 05, சனிக்கிழமை

IMF பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளனர்

Editorial   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சிலர் 15ஆம் திகதி இலங்கைக்கு வருகைத் தரவுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்குப் பெற்றுக்கொடுக்கப்படவுள்ள விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில், கலந்துரையாடலை முன்னெடுக்கவே அவர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்தாண்டு 26ஆம் திகதி இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக, குறித்த கடன் தொகை​யை வழங்குவது குறித்த கலந்துரையாடலை தற்காலிகமாக இடைநிறுத்த சர்வதேச நாணய நிதியம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதராக நியமிக்கப்பட்ட பின்னர், நிதி அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட சிலர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்குச் சென்று, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டீன் லெ​கோட்டை சந்தித்து கலந்துரையாடினர்.

அங்கு ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 இந்த 3 வருட நிதி விரிவாக்க கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு 1.5 டொலர் பில்லியனை கடனாக வழங்கவும் நான்கு சந்தர்ப்பங்களில் இதுவரை குறித்த கடன் தொகையிலிருந்து 759.9 டொலர் மில்லியன் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் 5ஆம் கட்ட நிதிக்கான கலந்துரையாடல்களே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .