2025 ஜூலை 07, திங்கட்கிழமை

O/L அனுமதிப்பத்திரம் கிடைக்காதோர் தரவிரக்கம் செய்துகொள்ளலாம்

Editorial   / 2018 நவம்பர் 30 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் திங்கட்கிழமையன்று (03) ஆரம்பமாகவுள்ள, 2018ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பிரத்தியேக விண்ணப்பதாரிகளுடைய பரீட்சை அனுமதிப் பத்திரங்கள்,  தற்போது தபால் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு அந்த அனுமதிப் பத்திரம் இதுவரை கிடைக்காத பிரத்தியேக விண்ணப்பதாரிகள் எவரேனும் இருப்பின், அடையாள அட்டை இலக்கத்தை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற உத்தயோகபூர்வ இணையத்தளத்தில் பதிவிட்டு, அனுமதிப் பத்திரத்தைத் தரவிரக்கம் செய்துகொள்ள முடியுமென, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில், அத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .