Freelancer / 2026 ஏப்ரல் 04 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதுவெலிய பகுதியில் உள்ள கால்வாயில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பேராதுவெலிய பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் என தெரியவந்துள்ளது.
இவர் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்த மாணவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுவன் தனது நண்பர்கள் மூவருடன் இணைந்து நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த சிறுவன் நீராடச் சென்ற இடத்திலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் சடலமாக மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .