2025 ஒக்டோபர் 31, வெள்ளிக்கிழமை

STC முன்னாள் தலைவர் கைது

Editorial   / 2025 ஒக்டோபர் 31 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட் பைலா இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த கூட்டுத்தாபனத்திற்கு பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் பின்பற்றாமல், 2015 ஆம் ஆண்டில் 50 தற்காலிக களஞ்சியசாலைகள் (கொட்டகைகள்) இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம், கூட்டுத்தாபனத்திற்கு ரூ. 99,679,799.70 நட்டம் ஏற்படுத்தியமை மற்றும் வெளித்தரப்பினருக்கு அதே தொகைக்குச் சமமான இலாபத்தை வழங்கிய குற்றச்சாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X