Editorial / 2026 மார்ச் 22 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் போக்குவரத்து மற்றும் விநியோகச் சேவைகள் தடையின்றி இயங்குவதை உறுதிப்படுத்தும் வகையில், தமது சாரதிகள் மற்றும் விநியோகப் பங்காளர்களுக்கு அதிக எரிபொருள் ஒதுக்கீடுகளை வழங்குமாறு Uber மற்றும் PickMe நிறுவனங்கள் அரசாங்கத்தை கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
நாட்டின் முன்னணி செயலி (App) அடிப்படையிலான தளங்களான இவை, தற்போதைய எரிபொருள் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதில் உள்ள சவால்களைச் சுட்டிக்காட்டி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.
பொதுப் போக்குவரத்து, உணவு விநியோகம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றில் இத்தளங்கள் ஆற்றிவரும் பங்களிப்பை நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மார்ச் 21 முதல் நாளாந்த எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள அந்நிறுவனங்கள், எனினும் தற்போதைய தேவைகளுடன் ஒப்பிடுகையில் இந்த அதிகரிப்பு போதுமானதாக இல்லை எனக் குறிப்பிட்டுள்ளன.
பயணங்களின் எண்ணிக்கை மற்றும் சாரதிகளின் ஈடுபாட்டைக் கண்காணிப்பதன் மூலம், எரிபொருளைச் சிக்கனமாகவும் அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் பயன்படுத்துவதை இத்தளங்கள் உறுதிப்படுத்துகின்றன.
வாராந்த எரிபொருள் ஒதுக்கீடுகளை அதிகரிப்பதன் மூலம், இத்தளங்களை நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான சாரதிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதோடு, பொதுமக்களுக்கான இணைப்புச் சேவைகளையும் தடையின்றி வழங்க முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வாரத்திற்கு மில்லியன் கணக்கான பயணங்களை மேற்கொள்ளும் இந்த இரு நிறுவனங்களும், எரிபொருள் கட்டுப்பாடுகள் நிலவும் சூழலில் அதிகரித்துள்ள கேள்வியை எதிர்கொள்ள மேலதிக எரிபொருள் ஒதுக்கீடு அவசியமானது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன.
30 minute ago
51 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
51 minute ago
52 minute ago
1 hours ago