2025 ஒக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை

WFP உடன் இணைந்து செயற்பட பேச்சு

Editorial   / 2025 ஒக்டோபர் 28 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக உணவுத் திட்டத்தின் (World Food Programme - Sri Lanka) இலங்கைக்கான பிரதிநிதியாகப் பதவியேற்ற பிலிப் வார்ட் (Philip Ward) மற்றும் பிரதி இயக்குநர் ரொபர்ட் ஒலிவர் (Robert Oliver) ஆகிய இருவரும்  ) பிரதமரின் அலுவலகத்தில், பிரதமரின் செயலாளர்   பிரதீப் சபுதந்திரியை திங்கட்கிழமை (27) சந்தித்தனர்.

1968ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்பட்டு வரும் உலக உணவுத் திட்டம் (WFP), இலங்கையில் உணவுப் பாதுகாப்பு, போசாக்குப் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் காலநிலைச் சவால்களை எதிர்கொள்ளும் சமூகங்களின் தாங்குதன்மை (Resilience) ஆகியவற்றை வலுப்படுத்துவதில் ஆதரவை வழங்கி வருகிறது.

2023 - 2027ஆம் ஆண்டுக்கான உலக உணவுத் திட்டத்தின் (WFP) வியூகத் திட்டம் (Strategic Plan) மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், குறிப்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்குப் பாதுகாப்பிற்கான அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டத்திற்கமைய உலக உணவுத் திட்டத்துடன் (WFP) இணைந்து செயற்படுவது குறித்து கலந்துரையாடப்பட்டது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .