2025 ஜூலை 21, திங்கட்கிழமை

e-NICக்கான அட்டைகள் கொள்வனவுக்கு அங்கீகாரம்

S.Renuka   / 2025 ஏப்ரல் 08 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆட்பதிவுத் திணைக்களத்தால் ஸ்மார்ட் அட்டை தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கைகள் 2017 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (e-NIC) வழங்கும் வேலைத்திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முறைமையின் கீழ் 15 வயது பூர்த்தியடைந்தவர்கள் அனைவருக்கும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (e-NIC) வழங்க வேண்டியுள்ளது.

இலங்கைப் பிரஜைகள் மீண்டும் பதிவு செய்து அடையாள அட்டைகளை வழங்குவதற்காக 17 மில்லியன் அட்டைகள் தேவைப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, குறித்த தேவையைப் பூர்த்தி செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறிகளைக் கோருவதற்கான பெறுகைச் செயன்முறையைக் கடைப்பிடித்து 15 மில்லியன் அச்சிடப்பட்ட பொலிகாபனேற் அட்டைகளைக் கொள்வனவு செய்வதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .