R.Maheshwary / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு- மெரின் ட்ரைவ் பகுதியில் உள்ள, தேசிய அபிவிருத்தி வங்கியின்( National Development Bank (NDB) கிளை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த வங்கியின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், வங்கியை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக வங்கி நிர்வாகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த பணியாளர் மினுவாங்கொட பகுதியில் வசித்து வருபவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை தினம் இந்த வங்கியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த வங்கியில் பணிபுரியும் ஏனைய பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுயதனிமையிலிருக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது

3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago