2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கையர்கள்

Freelancer   / 2023 நவம்பர் 27 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் -  சுழிபுரம் பகுதியில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த 07 பேர் சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக தமிழகம் சென்றுள்ளனர். 

தனுஷ்கோடிக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை (27) அதிகாலை கடலோர பாதுகாப்பு பிரிவினர் அவர்களை  கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது, 

இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி காணப்படுவதால் , தொடர்ந்து எம்மால் அங்கு வாழ முடியவில்லை என்பதால்  , தமிழகம் வந்துள்ளோம் எனவும் , இதற்காக மன்னாரில் இருந்து தனுஷ்கோடி பகுதியில் எம்மை இறக்கி விட படகோட்டிக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பணம் வழங்கியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர். 

எம்.றொசாந்த் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X