2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

Editorial   / 2019 ஜனவரி 20 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மனிதப் புதைக்குழி அகழ்வு பணிகளிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் சிலவற்றை பரிசோதனை நடவடிக்கைகளுக்காக, இம்மாதம் 23ஆம் திகதி அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

குறித்த அகழ்வு பணிகளுக்கு தலைமை தாங்கியுள்ள விசேட வைத்திய அதிகாரி, ஷமிந்த ராஜபக்‌ஷ குறிப்பிடுகையில், மனித புதைக்குழிகள் அகழ்வு பணிகள் இம்மாதம் 22ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்தோடு 132 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த அகழ்வு பணிகளில், 300 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் பரிசோதனை நடவடிக்கைகளுக்காகத் தெரிவு செய்து வைக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகள் சிலவற்றை, ​அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள இரசாயன ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும், பின்னர் இம்மாதம் 30ஆம் திகதியன்று குறித்த அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென்றும் வைத்திய அதிகாரி ஷமிந்த மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .