Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 செப்டெம்பர் 11 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று ஐந்தாவது நாளாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனித புதைகுழி அகழ்வுப் பணியானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
தொல்பொருள் துறை சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரால் குறித்த அகழ்வு பணிகள் இடம்பெறுகின்றன
இதற்கமைய இன்று திங்கட்கிழமை(11) ஐந்தாவது நாளாக இன்றும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
இதுவரை துப்பாக்கி சன்னங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு உடைகள் உள்ளிட்ட சாண்றுப்பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,
இதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் அகழ்வுப் பணிகளை பார்வையிட்டனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .