J.A. George / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் தொடர்புடைய அங்கொடை லொக்காவின் உதவியாளர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு துப்பாக்கிகள் மற்றும் டி-56 ரக வகை 18 ரவைகளுடன் குறித்த சந்தேக நபர் அங்கொடை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அங்கொடை லொக்காவுடன் சந்தேக நபருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 38 வயதுடைய சந்தேக நபர் தொடர்பில் முல்லேரியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, இரண்டு வாள்கள், துப்பாக்கி, கைக்குண்டு உள்ளிட்டவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் அவிசாவளை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
44 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026