2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அச்சத்தால் மூடப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு மீண்டும் திறப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்று அறிகுறிகளுடன் நபர் ஒருவர் நேற்று(9) குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதால், நேற்று மாலையுடன் மூடப்பட்ட குறித்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளதென, வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெதன்கமுவ தெரிவித்துள்ளார்.


குறித்த அவசர சிகிச்சைப் பிரிவு முழுமையாக கிருமிநாசினியால் சுத்தப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பயமின்றி, சிகிச்சைகளுக்காக வருமாறும் இந்த பிரிவில் கடமைகளுக்காக புதிய அலுவலக சபையினர் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


மேலும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகப்படும் நபருக்கு வைத்திய நடவடிக்கைகளை முன்னெடுத்த 7 வைத்தியர்கள் உள்ளிட்ட 39 பேர், சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென்றும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .